blog title

சனி, 16 பிப்ரவரி, 2013

மூட்டுவலி -moottu vali

மூட்டுவலி





பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது.

இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ 
முறையினில் ஏராளமாக உள்ளது.

மருந்துகள் :
1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி 
ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து 
சூப் செய்து சாப்பிடவும்.
  இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும்.

2 -வாயு சூரணம் :
    சுக்கு   -50 -கிராம் 
    மிளகு -50 -கிராம் 
    திப்பிலி -50 -கிராம் 
    சீரகம் -50 -கிராம் 
    ஏல அரிசி -25-கிராம்
இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து 
கொள்ளவும்.
இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.
    உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி 
நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும்.

இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட 
"வாத நாராயணன் தைலம்"செய்து தடவலாம்.  

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு (face book)  
  
   



2 கருத்துகள்: